You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. போட்டோக்களின் கொள்ளளவைக் குறைப்பதற்கு.. | Technical lanka

போட்டோக்களின் கொள்ளளவைக் குறைப்பதற்கு..

on Wednesday, December 14, 2011



நாம் கமராக்களில் எடுக்கும் புகைப்படங்களின் அளவானது பெரும்பாலான வேளைகளில் அதிகமாகவே காணப்படும். இதனால் அப் படங்களை நாம் பென்ட்ரைவில் எடுத்துச்செல்ல அதன் கொள்ளளவு போதுமானதாக இருக்காது. அதேநேரம் கணணியில் சேமித்து வைப்பதாயின் வன்தட்டிலும் அதிக இடத்தைப் பிடிக்கும்.

எனவே போட்டோக்களின் கொள்ளளவை குறைத்து சேமித்துக்கொள்வதன் மூலமே அதிக இட ஒதுக்கீட்டைத் தவிர்த்துக்கொள்ளலாம். இதனை பல வழிகளில் செய்துகொள்ளலாம்.

01     Paint ஐப் பயன்படுத்தி.

Paint ஐத் திறந்து பயன்படுத்திக் கொள்ள;

[Strat--> All Programs --> Accessories --> Paint ]

இதிலே File இனுள் Open என்பதன் மூலம் நீங்கள் அளவைக் குறைக்க எண்ணும் படத்தை திறந்துகொள்ளுங்கள்.

பின்னர் திறந்துகொண்ட படத்தினை சேமிக்க(Save) வேண்டியதுதான்.[Ctrl +S]

இப்போ உங்கள் படத்தின் அளவு குறைக்கப்பட்டுவிடும். ஆனால்; அதிகளவான படங்களை செய்வது மிகுந்த சிரமமாயிருக்கும். ஏனெனில் ஒவ்வொரு படமாகவே செய்துகொள்ள வேண்டும்.



02 MS OFFICE Picture Manager ஐப் பயன்படுத்தல்.

இதனைத் திறந்து பயன்படுத்திக் கொள்ள;

[  Start --> All Programs --> Microsoft Office --> Macrosoft Office  2010 Tool--> Microsoft Office Picture Manager  ]

இப்போ Microsoft Office Picture Manager  இனது வலப்பக்கத்தில் இலக்கம் 01இனால் வட்டமிட்டுக் காட்டிய “Add a new picture shortcut” என்பதை கிளிக் செய்யவும். இப்போ தோன்றும் விண்டோவில் உங்கள் போட்டோக்கள் உள்ளFolder ஐத் தெரிவுசெய்து [ படத்தில் காட்டியதுபோல் “No item match your search”என்று காணப்படும்.] இலக்கம் 02 இனால் வட்டமிட்டுக் காட்டிய “Add”என்பதை கிளிக் செய்யவும்

இப்போ கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு அனைத்து போட்டோக்களும் தோன்றும்.

“Ctrl + A” ஐக் கொடுத்து அனைத்து போட்டோக்களையும் தெரிவுசெய்து,இலக்கம் 02 இனால் வட்டமிட்டுக் காட்டிய “Edit Pictures”என்பதை கிளிக் செய்யவும்.

இப்போ கீழ் உள்ளவாறு காணப்படும்.இதிலே “Resize” என்பதைக் கொடுக்கவும்.

பின்னர் கீழ் காட்டியவாறு “Document-Large (1024x768px)” என்பதை தெரிவுசெய்து OK பண்ணவும்.

இப்போ கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு சேமித்துக் கொள்ளவும் [Ctrl+S].

இப்போ கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு உங்கள் போட்டோக்களின் கொள்ளளவு குறைக்கப்பட்டு சேமிக்கப்படும். சேமித்து முடிந்ததும் Microsoft Office Picture Manager  ஐ மூடிக்கொள்ளவும். அவ்வளவுதான், உங்கள் போட்டோக்களின் அளவு குறைக்கப்பட்டுவிடும்.

 

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets