You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க | Technical lanka

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க

on Sunday, December 11, 2011



Gmailஜிமெயில் தளத்தில் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட மெயில் அக்கவுண்ட்களை வைத்திருப்பார்கள். ஆனால், ஒரு வேளையில், ஒரு அக்கவுண்ட்டை மட்டுமே திறந்து பயன்படுத்த முடியும்.
ஒன்றைத் திறந்து மெயில்களைப் படித்து முடித்த பின்னர், அந்தஅக்கவுண்ட்டினை மூடிய பின்னரே அடுத்ததைத் திறந்து பயன்படுத்த முடியும்.
ஆனால், அண்மையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களைத் திறந்து பயன்படுத்தும் வசதியை, கூகுள் வழங்கியுள்ளது. இதனை multiple signin என அழைக்கிறது இதனைச் செயல்படுத்த கீழ்க்கண்டபடி செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
1. ஜிமெயில் இணையதளத்தில், செட் அப் (setup) பக்கம் செல்லவும். உங்களுடைய வெப் பிரவுசரில், எந்த கூகுள் அக்கவுண்ட்டையும் இயக்கவில்லை எனில், உங்கள் அக்கவுண்ட்டிற்கான தகவலைத் தரச் சொல்லி, ஜிமெயில் கேட்கும்.
2. இப்போது On Use multiple Google Accounts in the same web browser என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இவ்வாறு பல அக்கவுண்ட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஏற்படும் விளைவுகள் வரிசையாகத் தரப்பட்டிருக்கும். அவற்றிற்கான செக் பாக்ஸ்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, புரிந்து கொண்டதை ஏற்றுக் கொள்ளவும்.
3. அடுத்து Save என்பதில் கிளிக் செய்திடவும்.
இனி multiple signin செயல்படுத்தப்பட்டதால், கூகுள் மெயில் பட்டியலில், நீங்கள் அடுத்த அக்கவுண்ட் களுக்கான தகவல்களைத் தரலாம்.
1. ஜிமெயில் தளம் செல்லவும். முதலில் நீங்கள் பயன்படுத்திய அக்கவுண்ட் மூலம் அதில் நுழையவும். இந்தப் பக்கத்தின் வலது மேல் மூலையில், உங்கள் பெயரின் மீது கிளிக் செய்தால், அக்கவுண்ட் ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.
2. கிடைக்கும் மெனுவில் Switch account என்பதைக் கிளிக் செய்திடவும். அடுத்து Sign in to another account என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய லாக் இன் பக்கம் திறக்கப்படும்.
3. இங்கு புதிய அக்கவுண்ட்டிற்கான தகவல்களைத் தரவேண்டும். தந்த பின்னர், Sign in. என்பதில் கிளிக் செய்தி டவும். இப்படியே சேர்க்க வேண்டிய ஒவ்வொரு அக்கவுண்ட்டிற்கும் தகவல்களைத் தரவும்.
உங்கள் அக்கவுண்ட்களின் தகவல் களைத் தந்த பின்னர், ஒவ்வொரு ஜிமெயில் அக்கவுண்ட்டினையும் அடுத் தடுத்து திறந்து பயன்படுத்தலாம். முதலில் திறந்தவற்றை மூட வேண்டிய தில்லை.
முன்பு போல அக்கவுண்ட் ஆப்ஷன்ஸ் பெற்று, அதில் நீங்கள் விரும்பும் அக்கவுண்ட்டில் நுழையலாம்.
எல்லாம் முடிந்த பின்னர், அக்கவுண்ட்களை மூட, ஒவ்வொன்றாக மூட வேண்டியதில்லை. மொத்தமாக அனைத்தையும் மூடலாம்.                                                                                                                                                               

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets