You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. Screenshot எடுக்க சிறந்த மென்பொருள் | Technical lanka

Screenshot எடுக்க சிறந்த மென்பொருள்

on Tuesday, December 13, 2011


Screenshot எடுப்பதற்கு விண்டோஸில் Print Screen வசதி இருந்தாலும் அதில் பல வசதிகள் இருப்பதில்லை
.உதாரணமாக உங்கள் கணிணி திரையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக எடுக்க முடியாது. முழு திரையையும் எடுத்து பின் அதில் இருந்து வெட்டி எடுக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் மௌஸ் உடன் எடுக்க விரும்பினால் முடியாது.

இதனாலேயே தனி மென்பொருள்கள் உதவியை நாட வேண்டியுள்ளது. பல இலவச மென்பொருள்கள் உள்ளன. பல வசதிகள் சில மென்பொருள்களில் இருந்தாலும் அவைகள் எளிதாக இருப்பதில்லை. Shotty என்ற இந்த மென்பொருள் எளிதாக Screenshot எடுக்க உதவுகிறது.



இதனை இயக்குவது எளிது.நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை கிளிக் செய்தால் தோன்றும் கீழ்க்கண்ட திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்க பட்டு விடும்.



Ctrl + Prt Scr கிளிக் செய்தும் எடுக்கலாம்.வேண்டுமானால் நம் வசதிக்கு ஏற்ப பட்டனை மாற்றி கொள்ளலாம்.

Screen என்பதை கிளிக் செய்தால் முழு திரையும் , Region என்பதை கிளிக் செய்தால் திரையில் குறிப்பிட்ட பகுதியையும் , LQ Window என்பதை கிளிக் செய்தால் சற்று குறைந்த குவாலிடியில் குறிப்பிட்ட திரையையும், HQ Window என்பதை கிளிக் செய்தால் நல்ல குவாலிடியில் குறிப்பிட்ட திரையையும் Screenshot எடுக்கலாம்.

மேலும் பல திரைகள் இருப்பின் எந்த திரையை எடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.



எடுக்கப்பட்ட Screenshot இல் மேலும் பல திருத்தங்களை அல்லது மாற்றங்களையும் செய்ய வசதி தருகிறது.



இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Shotty - Take high quality screenshots

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets