You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. வைரஸ் தாக்கிய Folder Option மீளப் பெறுதல். | Technical lanka

வைரஸ் தாக்கிய Folder Option மீளப் பெறுதல்.

on Tuesday, December 13, 2011





Folder Option என்பது விண்டோஸ் பயனாளர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே.
இதன்மூலம் நாம் ஆவணங்களை மற்றயவர்களுக்கு காட்டவோ அல்லது மறைத்துவைக்கவோ முடியும்.


Folder Option ஐ Control Panel இல் சென்று திறந்துகொள்ளலாம். அல்லது windows XP இல் எனில் My Computer ஐ திறந்து அதில் Tools ஐ கிளிக் செய்து Folder Option ஐ அடையலாம். Vista மற்றும் Windows 7 இல் My Computer ஐ திறந்து அதில் Organize ஐ கிளிக் செய்து அங்கே folder and search option என்பதை கிளிக் செய்தும் Folder Option ஐ திறந்துகொள்ளலாம்.

இவ் Folder Option ஆனது வைரஸ் அல்லது வேறு தாக்கங்களால் கணணியில் செயலற்றுப் போய்விடும். எனவே இதனை மீண்டும் எவ்வாறு செயற்படுத்துவது என்று பார்ப்போம். மூன்று முறைகளில் இதனை மேற்கொள்ளலாம். அதிலொரு முறையை இப்போ பார்ப்போம்.

முதலில் RUN இல் சென்று “GPEDIT.MSC “ என்று டைப் செய்து செய்யுங்கள்.
தோன்றும் விண்டோவில் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று Windows Explorer ஐ அடையுங்கள்.
User Configuration  --> Administrative Templates --> Windows Components --> Windows Explorer.
இப்போ வலப்பக்கத்திலே உள்ள "Removes the Folder Options menu item from the Tools menu" என்பதை Double Click செய்யவும்.
இப்போ தோன்றும் விண்டோவில் " Not Configured " என்பதைத் தெரிவு செய்து Ok கொடுக்கவும். பின்னர் கணணியை மீள் இயக்கவும்.
இப்போ மீண்டும் Folder Option தோன்றியிருக்கும். இனியென்ன பரிகாரம் கிடைத்துவிட்டதுதானே....!

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets