You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. திரைப்படங்களின் Subtitle Edit செய்ய உதவும் மென்பொருள் | Technical lanka

திரைப்படங்களின் Subtitle Edit செய்ய உதவும் மென்பொருள்

on Saturday, December 17, 2011


சிலர் ஆங்கில படங்களை Subtitle உதவியோடு பார்ப்பதுண்டு. Subtitle டவுன்லோட் செய்ய பல தளங்கள் உள்ளன.
அவற்றில் சிறந்த  சில   தளங்கள் www.opensubtitles.org/http://subscene.com/



நாம் டவுன்லோட் செய்த சில Subtitles நம்மிடம் உள்ள திரைப்படத்தோடு பொருந்தாது போலாம் அல்லது 1 விநாடியோ , இரு விநாடிகளோ  முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ ஓடலாம். இவற்றை சரி செய்து சரியான முறையில் திரைப்படத்தை ரசிக்க இந்த மென்பொருள் உதவுகிறது. இதன் பெயர் SubMagic .இது ஒரு இலவச மென்பொருள். இதை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதை பற்றி காண்போம் . 

இந்த மென்பொருளில் வசதி என்ன என்றால் நம் திரைப்படத்தை இதில் Open செய்து மற்றும் Subtitle File ஐஉம் உடன் Open செய்து இரண்டையும் காணலாம். தவறாக உள்ள வார்த்தைகளை நாம் Edit செய்யலாம். கீழ்க்கண்ட புகைபடத்தை பார்க்க . அதில் வட்டமிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியின் மூலம் வார்த்தைகளை Edit செய்யலாம் . மேலும் செவ்வக கோடிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியின் மூலம் வரிகளை சேர்க்கலாம் ,வெட்டலாம் ,பிரிக்கலாம் மற்றும் இடமற்றலாம் .


மேலும் நீங்கள் டவுன்லோட் செய்த Subtitle File  1 விநாடியோ , இரு விநாடிகளோ  முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ இருந்தால் அவற்றை கீழ்க்கண்ட முறையில் சரிசெய்யலாம். கீழே உள்ள புகைப்படத்தை பார்க்க .அதில் செவ்வக கோடிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியில் இரு Options இருக்கும் .

ஒன்று All Subtitles மற்றொன்று Selection

 
All Subtitles Option ஐ பயன்படுத்தி அனைத்து வரிகளையும் எவ்வளவு மணிகளோ,நிமிடங்களோ,விநாடிகளோ முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வர செய்யலாம்.
 
Selection Option ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான   வரிகளை மட்டும்  எவ்வளவு மணிகளோ,நிமிடங்களோ,விநாடிகளோ முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வர செய்யலாம்.
 
இதில் Sooner மற்றும் Later என உள்ள இரு Options முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வர செய்ய உதவுகிறது .


மேலும் நீங்கள் டவுன்லோட் செய்த Subtitle File சில பிழைகள் இருந்தால் அவற்றை சரி செய்யவும் உதவுகிறது . கீழ்க்கண்ட புகைபடத்தை பார்க்க . அதில் வட்டமிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியின் மூலம் பிழைகளை சரி படுத்தலாம் .

Fix Now என்ற Option ஐ கிளிக் செய்தால் பிழைகளை சரிசெய்து தந்து விடும் .  மேலும் விபரங்களுக்கு மற்றும் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க .

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets