You could put your verification ID in a comment Or, in its own meta tag Or, as one of your keywords Your content is here. The verification ID will NOT be detected if you put it here. WinLockPro: விண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்வதற்கு | Technical lanka

WinLockPro: விண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்வதற்கு

on Wednesday, January 11, 2012

உங்களது கணணியில் வங்கி கோப்புகள்,
அலுவலகம் சம்பந்தமான தகவல்கள் மற்றும் பல்வேறு விதமான தகவல்களை வைத்திருப்பீர்கள்.


இத்தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவதற்கு மிகச்சிறந்த வழி உங்களது இயங்குதளத்தை லாக் செய்வதே.

இவ்வாறு செய்யும் பட்சத்தில் உங்களது கணணியை எவராலும் உபயோகப்படுத்த முடியாது. 

கணணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காரணங்களால் கணணி அப்படியே வைத்துவிட்டு சென்று விடுவோம்.

ஆனால் ஒருசிலர் இதனை தவறாக பயன்படுத்திக் கொள்வர், நம் தகவல்களை திருடவோ அல்லது அல்லது நம் தகவல்களை அழிக்கவோ வாய்ப்பு உண்டு.

இது போன்ற சூழ்நிலையை சமாளிக்க இயங்குதளத்தை லாக் செய்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கும். இதற்கு WinLockPro என்ற மென்பொருள் உதவி புரிகிறது.

இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்துவிட்டு WinLockPro மென்பொருளை ஒப்பன் செய்யவும்.

பின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு சேமித்துக்கொள்ளவும். Select Background என்னும் பொத்தானை அழுத்தி வேண்டிய படத்தை தெரிவு செய்து கொள்ளவும்.

பின் Start on Windows startup என்னும் பொத்தானை அழுத்தி மீண்டும் கணணியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் வேண்டும் போது இந்த WinLockPro மென்பொருளை ஒப்பன் செய்து கொள்ளவும்.

கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் லொகின் செய்து திறந்து கொள்ள முடியும். இது பல்வேறு வகையில் நமக்கு உதவிடும்.

0 comments:

Post a Comment

follow






Blogger Widgets